அலாதியான அந்த பத்து நிமிடங்கள்…
சூரிய உதயம் மற்றும் அத்தமனம் காண்பதில் அவனக்கு எப்பொழுதும் ஒரு அலாதியான இன்பம். Grand Tetonனில் காலை கண்ணீர் மல்க அவன் கண்டக்காட்சி என்றுமவன் நினைவில் வாசம் வீசும். அப்பொழுதுடைய அவன் எண்ணோட்டங்கள் கீழே:
“புகலொன்றில்லா அடியேன், உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்ற நம்மாழ்வாரின் (மாறன், சடகோபன்) உருக்கமான திருவாய்மொழி வரிகளே அவனுக்கு நினைவில் மலர்ந்தது. எப்பிடி ஆழ்வார் வேறிடமின்றி திருமலை பெருமானிடத்திலேயே இருக்க நினைத்தாரோ, அதே போல் இவனுக்கும் இந்த grand Teton அடியிலேயே இருந்து இயற்க்கை மூலம் இறையை அடைய மாட்டோமா என்ற ஆசை.
அவரோ உத்தமர், எண்ணிய காரியத்தில் திண்மை கொண்டடைந்தார். இவனோ நீச்சன், வெறும் பொருளிலும் காமத்திலும் சுகம் கண்டு நேரம் கழிப்பவன், அறத்தையும் வீடையும் பற்றி அந்த அலாதியான 10 நிமிடத்துக்குப்பிறகு (சூரிய உதயம்) மறந்தே திரும்பினான்.“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்ற குறளையும் நினைவில் கொண்டான்.